கனடியர்களின் கவலை!!

 


கனடியர்கள் விடுமுறைக்காலச் செலவுகளைக் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு அதிகரித்துள்ள பொருளாதார செலவீனங்கள் காரணமாக நத்தார் பண்டிகை கால செலவுகளை வெகுவாக குறைத்து எளிமையாக பண்டிகையைக் கொண்டாட கனடியர்கள் தீர்மானித்துள்ளதாக ஹரிஸ் அன்ட் பாட்னஸ் என்கிற நிதி நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

1820 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் சுமார்72 வீதம் பேர் இந்த முடிவைக் கூறியுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன் 62 வீதம் பேர் தாங்கள் பொருளாதார ரீதியாக பண்டிகைக்கால விடுமுறைக்கு தயாரான நிலையில் இல்லை எனவும் 53 வீதம் பேர் நத்தார் செலவுகளை எவ்விதம் சமாளிப்பது எனும் கவலையில் உள்ளதாகவும் அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.