இனவாத்த்திற்கு அடிமையான இலங்கை அரசின் அடையாளம்!

 


எங்கேனும் இப்படி ஒரு வெட்கம் கெட்ட கொடுமையைப் பார்த்தவருண்டோ?


ஒரு நாட்டின் சட்டத்தைப் பாதுகாக்கவேண்டிய காவல்துறையினரால் புத்தரின் பெயரால் சட்டவிரோதக் கட்டுமானம் கட்டி மக்கள் மோராட்டத்தால் அகற்றப்பட்டு பின் மீண்டும் காவலரால் தூக்கி வரப்பட்டு நிர்மானிக்கப்படும் அநீதி.. இனவாத்த்திற்கு அடிமையான அரசின் அடையாளம்!


தமிழர் நிலத்தில் தமிழர்க்கு இழைக்கப்படும் இந்த அநீதிக்கு அரசே முன் நிற்கும் கொடுமை கண்டனத்திற்குரியது!


இந்த பிக்குக்களின் அடிக்கு அச்சப்பட்டு சட்டவிரோதமாக நடக்கும் அரசா தமிழர்களின் உணர்வுகளைப் புரிந்து நடக்கும் “தோழமை” அரசு என பரப்புரை செய்கின்றனர் சிலர்?


திருகோணமலையில் நேற்றிரவு காவல்துறையினரால் அகற்றப்பட்ட சட்டவிரோத புத்தர் சிலையைத் தூக்கிச் சென்ற காவல்துறையினரே மீண்டும் அதை பிக்கு அடிதடிக்காரரின் ஏவல் அடிமைகளாகக் கூனிக் குறுகி தூக்கிவந்து பிரதிஷ்டை செய்துள்ளனர்.


பொலிஸ் பாதுகாப்போடு மீண்டும் புத்தர் சிலை நிறுவப்பட்டு பூஜைகள் தொடர்வதாக பிந்திய தகவல்கள் கூறுகின்றன.


மீண்டும் இனவாததத்தினைத் தூண்டும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


 NPP அநுர அரசை புகழ் பாடுபவர்களே இந்த அரசு தமிழர்க்கு நீதியைப் பெற்றுத் தரும் என இனியும் முட்டு கொடுக்காதீர்கள்!


JVP +, NNP ஆட்சியாளர்கள் உண்மையான பொதுவுடமைவாதிகளாக இருந்தால் இப்படி பௌத்த சிங்கள ஆதிக்க சக்திகளின் அடிமைகளாக இருப்பார்களா?


இதற்கு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திராவின் முயற்சியோடு, பிரதிபாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால நேரில் உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. 


எனின் “இதற்குப் பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுரகுமார திஸ்ஸநாயக்காவின் அனுமதி பெறப்பட்டிப்பதோடு NPP யின் உயர்மட்டத்தினரும், பெலவத்தையினரும் சம்மதித்திருக்க வேண்டும்!” என்ற ஆய்வாளர்களின் ஊகமும் சரியே!


“அமைச்சர் ஆனந்த விஜயபாலவும் NPP அரசாங்கமும் பேரினவாத இனவெறிச் சக்திகளின் அழுத்தங்களுக்கு கோழைத்தனமாக அடிபணிந்துள்ளனர்!” என்ற கருத்தும் உண்மையே!


அநுர அரசிற்கு முட்டுக் கொடுத்து வருகின்றவரே இவற்றிற்குப் பதில் சொல்லுங்கள்!


ஒன்று மட்டுமே உண்மை! போராட்டங்களே தமிழினத்திடம் எஞ்சிய வாழ்வாகின்றது!


அனைவரும் இணைந்து ஒரே குரலாக ஒவ்வொரு அநீதிக்கு எதிராகவும் எதிர்ப்பைத் தெரிவித்துப் போராடுவோம்!

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.