ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை!!


 வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இன்று (17) மரண தண்டனை விதித்து அந்நாட்டு குற்ற சர்வதேச தீர்ப்பாயம் தண்டனை நிறைவேற்றியுள்ளது. 

வங்கதேசத்தில் 2024 ம் ஆண்டு இட ஒதுக்கீடு தொடர்பாக இடம்பெற்ற மாணவர்கள் கிளர்ச்சியின் போது வன்முறைகள் தலைதூக்கின,  1000 இற்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். ஷேக் ஹசீனாவின் ஆட்சி கலைந்தது. 

அவர் இந்தியாவில் தஞ்சம் புகுந்தார், அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்பவர்களைச் சுட்டுக்கொல்லுமாறு ஹசீனா உத்தரவு பிறப்பித்த குரல் பதிவு வெளியானது. 


இதை ஆதாரமாக கொண்டு தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.முன்னாள் பொலிஸ் ஜி. ஜி, உள்துறை மந்திரி ஆகியோர் மீதும் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.