தனி ஈழத்தமிழராக நாம் எப்போது தெளிவாக நிற்போம்!
திராவிடம் சார்ந்து தமிழகத்திலிருந்து வருகின்ற எந்நபரோடும் (கூட்டணிக்கட்சிகளில் அங்கம் வகிப்போர்) ஈழத்தில் தமிழ்த்தேசியம் சார்ந்து நிற்பவர்கள் எவரும் ஈழத்தமிழர் தொடர்பான விடயங்களில் அவர்களோடு பேசுவது எள்ளளவும் பொருத்தமானதல்ல.
2009 வரை; யாரை எங்கே பயன்படுத்துவது, எப்போது கழற்றிவிடுவது என்ற நுட்பம் தெரிந்த பலம் வாய்ந்த தலைமை எங்களிடம் இருந்தது. ஆதலால் அதற்கு முன்பு இவை பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.
இன்று ஈழத்தில் மட்டுமல்ல, ஐரோப்பா கனடாவிலும் திராவிடம் மெல்ல மெல்லக் கால்பதிக்கப்பார்க்கிறது. இப்பொழுதுதான் ஒருசில இடங்களில் தமிழ்ச்சங்கங்கள் "திராவிடப்பிடியிலிருந்து" விலகிவருகின்றன. இவ்வேளையில் ஈழத்தமிழர்கள் தவறான முன்னுதாரணமாக இருந்துவிடக்கூடாது.
ஏனெனில் திராவிடம் சார்ந்தோர் இன்று; தமிழகத்தில் வாழும் எம்மைப் போல ஒரேமொழிபேசும் சொந்தங்களைச் சாதியின் பெயரால் பிரித்துவைத்தும்,
தெலுங்கர்களின் ஆட்சி மேலோங்க திராவிடத்துக்கு முட்டுக்கொடுத்தும், யாரைப்பார்த்து எமது தலைவர் எமது தேசியக்கொடியை வடிவமைத்தாரோ அதே இராசராச சோழன் மக்களின் நிலங்களைப் பறித்து பிராமணருக்குக் கொடுத்தான் என வரலாறுத்திரிபை உருவாக்கியும்,
முத்துக்குமாரின் சாவினை நீர்த்துப்போகச்செய்து அவரது உடலத்தை உடனே அப்புறப்படுத்தத் துணைநின்ற அத்தனைபேரையும்
அடையாளம் காண்பதோடு மட்டுமன்றி, அவ்வாறான நபர்களுக்கு வணக்கம் வைத்துவிட்டு விலகிவிடவேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.
காலம் காலமாக பொய்யான வரையறைகளுக்குள் நம்மை மட்டுப்படுத்திக்கொண்டு, "அவளும் பெண்தானே" கணக்கில் ஆயிரம் வகையாக எம்மினத்திலுள்ளவர்களே சாக்குப்போக்குச் சொல்லக்கூடும்.
ஈழத்தமிழராக நாம் எப்போது தெளிவாக நிற்போம் , ஏனெனில் இழப்பதற்கு இனிக் கோமணம் கூட நம்மிடமில்லை.
-தேவன்

.jpeg
)





கருத்துகள் இல்லை