யாழ். பல்கலை மாணவன் கைது!!

 


யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் ஒருவர் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். 

யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ். போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

யாழ். பல்கலைக்கழகம் மருத்துவ பீட பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த பானகம பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயது மாணவனே யாழ்ப்பாணம் - கந்தர்மடம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் எதிர்வரும் 30 திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.