இந்தியத் துணைத் தூதர் மஹிந்தவுக்கு வாழ்த்து தெரிவிப்பு!📸


இலங்கைக்கான இந்தியத் துணைத் தூதுவர் ஸ்ரீ ஹர்விந்தர் சிங், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தங்காலை பகுதியில் அமைந்துள்ள கால்டன் இல்லத்தில் நேற்று (செவ்வாய்) காலை சந்தித்து கலந்துரையாடினார்.


இந்த சந்திப்பின் போது, இரு தரப்பினரும் பரஸ்பர அக்கறையுள்ள விடயங்கள் குறித்தும், தற்போதைய அரசியல் மற்றும் பிராந்திய நிலைமைகள் குறித்தும் முக்கியமான கலந்துரையாடல்கள் நடத்தியதாக தூதரகம் தெரிவித்துள்ளது.


நேற்றைய தினம் 80 ஆவது பிறந்தநாளை கொண்டாடிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்களின் சார்பில், இந்தியத் துணைத் தூதுவர் ஸ்ரீ ஹர்விந்தர் சிங் உத்தியோகபூர்வ பிறந்தநாள் வாழ்த்துகளை வழங்கினார்.


கடந்த செப்டெம்பர் 10 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சிறப்பு சலுகைகளை இரத்துச் செய்யும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கொழும்பு விஜேராம மாவத்தை அரச வாசஸ்தலத்திலிருந்து 11 ஆம் திகதி வெளியேறி தங்காலையில் உள்ள கால்டன் இல்லத்துக்கு மாற்றமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.