கிராமிய பாலங்கள் நிர்மாணிப்புக்கு அனுமதி!
கிராமிய பாலங்களை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் அரச அபிவிருத்தி மற்றும் நிர்மாணத் தொழில் கூட்டுத்தாபனத்திற்கு நாடளாவிய ரீதியில் 326 பாலங்களை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்கு 2021.02.08 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றிருந்தது.
அப்போது வேலைகள் ஆரம்பிக்கப்படாத 184 பாலங்களை நிர்மாணிப்பதற்கு 2022 ஆம் ஆண்டில் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், எஞ்சிய 142 பாலங்களில் 45 பாலங்களின் வேலைகள் தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
மேலும், 23 பாலங்களின் வேலைகள் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசங்களில் போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற பொதுமக்கள் எதிர்கொண்டுள்ள சிரமங்களைக் குறைக்கும் நோக்கில் எஞ்சியுள்ள 74 பாலங்களின் வேலைகளை அரச அபிவிருத்தி மற்றும் நிர்மாணத்தொழில் கூட்டுத்தாபனத்தின் மூலம் மீண்டும் ஆரம்பித்து, அவற்றின் நிர்மாணப் பணிகளைத் துரிதமாகப் பூர்த்தி செய்வதற்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

.jpeg
)





கருத்துகள் இல்லை