சபரிமலையில் குவிந்த இலட்சக்கணக்கான பக்தர்கள்!!


 வருடாந்த மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு நிகழ்ச்சிக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று முன்தினம் (16) திறக்கப்பட்டது. நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறது. 


இன்று அதிகாலை முதல் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். 


இதனால் பதினெட்டாம் படி அருகே தள்ளுமுள்ளு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 


வரிசையில் நிற்கும் பக்தர்களை தாண்டி சில பக்கதர்கள் செல்வதால் அசாதாரண சூழ்நிலை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 


பதினெட்டாம் படிகளில் பாதுகாப்பு பணியில் பொலிஸார் நிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 


இவர்கள் பக்தர்களை பாதுகாப்பாக படிகளில் ஏற்றி விடுகிறார்கள். கூட்டம் அதிகரித்துள்ளதால், கூடுதலாக 200 பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். 


பெரும்பாலான பக்தர்கள் சிறுவர்களுடன் வந்துள்ளதால் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். குடிப்பதற்கு தண்ணீர் கூட கிடைக்காமல் அவதிப்படுவதாக தெரிவித்துள்ளனர். 


இது தொடர்பாக திருவிதாங்கூர் தேவசம் போர்டின் புதிய தலைவராக பதவி ஏற்றுள்ள கே. ஜெயக்குமார் கூறும்போது "பக்தர்கள் வரிசையைாக செல்வதற்கும், தண்ணீர் வழங்குவதற்குள் கூடுதலாக 200 பொலிஸார் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். 


18 படிகளில் பக்தர்கள் பாதுகாப்பாக நிலையான ஏறுவதை உறுதி செய்ய வேண்டும் என வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற மிகப்பெரிய மற்றும் அபாயகரமான வகையில் கூட்டத்தை இதுவரை நான் பார்த்ததில்லை. 


சில பக்தர்கள் வரிசையை பின்பற்றாமல் முன்னால் குதித்து செல்கின்றனர். 


இங்கே இருக்கிற பெரிய கூட்டத்தைப் பார்க்கவே எனக்குப் பயமா இருக்கு. பக்தர்கள் சீரான இயக்கத்தை உறுதி செய்யவும், யாரும் வரிசையையோ அல்லது வரிசையையோ துண்டிக்காமல் இருக்கவும் நான் உத்தரவுகளை பிறப்பித்துள்ளேன். இவ்வளவு பெரிய கூட்டம் இங்கு கூடியிருக்கக்கூடாது" என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.