வல்வெட்டித்துறையில் "மேதகு” தலைவரிற்கு பிறந்தநாள் கொண்டாடப்பட்டது!📸
வல்வெட்டித்துறையில் "மேதகு” தலைவரிற்கு பிறந்தநாள் கேக் வெட்டி, இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டுள்ளது!
தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய தலைவரின் 71 ஆவது அகவை நாள் இன்று (நவம்பர் 26) அவரது பெற்றோர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள வல்வெட்டித்துறையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் ஐயா தலைமையில் எழுச்சியோடு கொண்டாடப்பட்டது.
சிவாஜிலிங்கம் ஐயாவிற்கு நன்றி!
இந்நிகழ்வில் வெடிகள் கொளுத்தப்பட்டு, கேக் வெட்டப்பட்டதோடு, அகவை 71 ஐக் குறிக்கும் வகையில் 71 மரக் கன்றுகள் மற்றும் இனிப்புப் பண்டங்களும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு, பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் அன்புடன் வழங்கப்பட்டு, மக்கள் மனம் குளிர சிறப்பிக்கப்பட்டது.
தடைகளை உடைக்கும் வல்லமை மாந்தரால் மட்டுமே எழுச்சி வரலாறுகள் எழுதப்படுகின்றன!
வல்லமையூட்டும் எம் தலைவரின் பெயரால் இனியும் எம் தமிழின வரலாறு சிறுகச் சிறுகத் தடைகள் உடைத்து நிமிரும்!






.jpeg
)





கருத்துகள் இல்லை