இலங்கைக்கு சர்வதேச சமூகமும் அவசர மனிதநேயத்துடன் உதவி!📸
இலங்கை வரலாற்றில் அரிதாகத் தோன்றும் பெரிய அளவிலான வெள்ளப் பேரிடர் உருவாகியுள்ள இந்த நேரத்தில், சர்வதேச சமூகமும் அவசர மனிதநேயத்துடன் உதவி செய்து வருகிறது.
இந்திய விமானப்படையின் IL-76 விமானம் 9 டன் நிவாரணப் பொருட்கள் மற்றும் 80 உறுப்பினர்கள் கொண்ட 2 மீட்பு குழுக்கள் (NDRF – Urban Search & Rescue) உடன் இன்று கொழும்பை சென்றடைந்துள்ளது. இதுவரை 27 டனுக்கு மேற்பட்ட நிவாரணப் பொருட்கள் வான்வழி மற்றும் கடல்வழி மூலம் இலங்கைக்குக் கிடைத்துள்ளன.
இன்று அதிகாலையில் C-130 Hercules விமானம் 12 டன் அவசர மருத்துவப் பொருட்கள் கொண்டு வந்தது. இதே நேரத்தில், கொழும்பில் நங்கூரமிட்டுள்ள INS Vikrant மற்றும் INS Udaygiri கப்பல்கள் முதற்கட்ட நிவாரணப் பொருட்களை நேற்று வழங்கியுள்ளன.
இந்திய கடற்படையின். ஹெலிகாப்டர்களும் மீட்பு பணியில் உதவுவதற்கு தயாராக உள்ளன. இன்னும் உதவிகள் தொடர்ந்து வழங்கப்படும் என்று இந்திய வெளியுறவுத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மாலைத்தீவு அரசு, இலங்கையின் தற்போதைய வெள்ளப் பேரிடரை முன்னிட்டு பேரிடர் மீட்பு மற்றும் அவசர நிவாரண நடவடிக்கைகளுக்காக USD 50,000 (அமெரிக்க டொலர் 50,000) நேரடி நிதி உதவி & 25,000 டின் “டூனா மீன்” (tuna cans) இது உணவு பாதுகாப்பு மற்றும் உடனடி நிவாரண உணவிற்காக மாலைத்தீவு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அமெரிக்க அரசு USD 2 Million (அமெரிக்க டொலர் 2 மில்லியன்) அறிவித்துள்ளது.
இந்த நிதி பயன்படுத்தப்படுவது:
• அவசர மருத்துவ உதவி
• குடிநீர் & சுகாதாரம்
• உலர் உணவு & அவசர உணவு விநியோகம்
• தற்காலிக தங்குமிடங்கள்
• மீட்பு நடவடிக்கைகள்
• ஆபத்தான பகுதிகளில் rapid response
• குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுதல்
(இது U.S. Embassy Colombo + USAID அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.)









.jpeg
)





கருத்துகள் இல்லை