கிளிநொச்சியில் மீட்புப் பணிக்காக இராணுவம்!📸


கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளை பிரதேச செயலர்பிரிவின் கீழான பிரதேசங்களில் வெள்ள பாதிப்பிற்குள்ளான நிலமையில் இராணுவத்தினரின் உதவியுடன் மீட்பு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டன.


நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு பகுதிகளிளும் பலத்த பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதுடன் காற்றுடன் கூடிய அதிக மழை பெய்து வருவதன் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதான குளமான இரணைமடு குளம் தற்பொழுது நீர்மட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக இன்று 28.11.2025 காலை முதல் இரணைமடு குளத்தின் அனைத்து வான் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளன.


அதேவேளை கனகாம்பிகை குளமும் தற்பொழுது வான் பாய்ந்த வண்ணம் உள்ளது. கல்மடு குளமும் கொள்ளளவை எட்டி வான் பாய ஆரம்பித்துள்ளது.


எனவே அனர்த்த நிலமையினை கருத்தில் கொண்டு குளத்தின் நீரேந்தும் பகுதிகளின் கீழ் வாழும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறும் தமது பாதுகாப்பினை உறுதி செய்து கொள்ளுமாறும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


மாவட்ட ஊடகப்பிரிவு

மாவட்டச்செயலகம்

கிளிநொச்சி.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.