இன்று இரவுடன் இந்த வானிலை நிலைமையும் சீரடைந்து விடும்


மணிவேகமான காற்று வீசுகை! சற்று கனமழை! அச்சமடைய தேவையில்லை. டிட்வா புயலின் உள்வளையத்தின் பின் பகுதி கடலினுள் சென்று கொண்டிருக்கின்றது. அதனால் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னாரில் காற்று சற்று வேகமாக வீசுகின்றது. சற்று கனமழையும் கிடைத்து வருகின்றது. 


இது புயலின் ஆற்றல் மிக்க உள்வளையம் கடலுக்கு செல்வதன் விளைவே இந்த வேகமான காற்று வீசுகை மற்றும் சற்று கனமழை. 


அச்சப்பட எதுவமில்லை. ஆனால் ஏற்கெனவே மண் நெகிழ்வான நிலையில் இருப்பதனால் மரங்கள் பாறி விழக்கூடும். மின் கோபுரங்கள் சரிந்து மின் வடங்கள் அறுந்து விழக்கூடும். ஆகவே இவை தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும். 

- நாகமுத்து பிரதீபராஜா - 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.