செல்வத்திடம் பல கோடிகளை வாங்கிய ஊடகவியலாளர்கள்!
சின்ன சின்ன விடயங்களை ஊதி பெருப்பித்து தலைப்பு செய்திகள் போடும் பத்திரிகை ரீவி ஊடகங்கள் ஊடகவியலாளர்கள் இது பற்றி எந்த மூச்சும் விடாமல் கள்ள மௌனம் காட்டுவது ஏன்?
ஒவ்வொரு தனிமனிதனுக்கும் சுய ஒழுக்கம் முக்கியமானது. அதிலும் பொதுவாழ்வில் ஈடுபடுவோருக்கு, குறிப்பாகத் தம்மைத் தமிழ்த் தேசிய வாதிகளாகக் காட்டிக்கொள்வோருக்கு அது மிகமிக முக்கியமானது.
ஆனால் இங்கு நடப்பது என்ன?
தமிழ்த் தேசியவாதி, நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் போராளிகளின் தலைவர் செய்வது என்ன?
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு அவிசு.
ஊடகங்களை ஒருபுறம் ஒதுக்கி வைப்போம். அவை ஒவ்வொன்றும் சுயநலனும் சார்பு நிலையும் கொண்டவை. ஆனால் சமூகத்தில் தம்மை பெரிய மனிதர்களாகக் காட்டிக்கொள்வோர் அல்லது சமூகத்தால் அவ்வாறு கருதப்படுவோர் அல்லது தம்மை மக்களின் தலைவர்களாக எண்ணுவோர் இதுபற்றி இன்னும் ஏன் வாய்திறக்கவில்லை? இவை தனிப்பட்ட விடயம் என கடந்து செல்ல முடியுமா?
இவ்வாறான விடயங்கள் தொடர்பாக மௌனம் சாதித்துவிட்டு பின்னர் எமது சமூகம் சீரழிந்து செல்கிறதென நீலிக்கண்ணீர் வடிப்பதில் என்ன நியாயம் இருக்கப் போகிறது?
மக்கள் ஏன் அர்ச்சுனாவின் பின்னாலும் NPP பின்னாலும் சென்றார்கள், செல்கிறார்கள் என்பது புரிகிறதல்லவா?
விடுதலைப் புலிகளின் சில செயற்பாடுகள் தொடர்பாக எதிர்மறையான விமர்சனங்கள் என்னிடம் இருந்தன.
அச்சந்தர்ப்பங்களில் அதை அவர்களிடம் நேரடியாகவும் சொல்லியிருக்கிறேன். ஆனால் ஒவ்வொரு விடயத்திலும் எனது பார்வை தவறு அவர்கள் செய்ததே சரி என்பது தொடர்ந்து உறுதியாகி வருகிறது.
அருந்தவபாலன்
முன்னாள் அதிபர்

.jpeg
)





கருத்துகள் இல்லை