யாழ் மாவட்ட இளைஞர் அணி கூடைப்பந்தாட்ட போட்டியில் எதிரணிகளை திணற வைத்து 8வது முறையாகவும் சம்பியன்!
யாழ் மாவட்ட இளைஞர் அணி தமது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணிகளை திணற வைத்து 8வது முறையாகவும் சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்து சாதனை படைத்துள்ளனர்.
தேசிய மட்ட பெண்களுக்கான கூடைப்பந்தாட்ட போட்டியில்
மாவட்ட இளைஞர் அணிகளுக்கு இடையிலான 35வது தேசிய மட்ட கூடைப்பந்தாட்ட போட்டிகள் குருநாகல் பாலிகதேவா கல்லூரியில் நடைபெற்றது.
இதில் பெண்களுக்கான போட்டியில் யாழ் மாவட்ட இளைஞர் அணி காலிறுதியாட்டத்தில் குருநாகல் இளைஞர் அணியை எதிர் கொண்டு 16:06 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதி ஆட்டத்திற்குத் தகுதி பெற்றுள்ளனர். அரையிறுதி ஆட்டத்திலும் கொழுப்பு நகர்ப்புற இளைஞர் அணியை எதிர் கொண்டு 36:18 என்ற அபாரமான புள்ளிகளை பெற்று இறுதியாட்டத்தில் காலி இளைஞர் அணியை எதிர்த்து மோதினர். இதிலும் தமது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 60:16 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 8வது முறையாகவும் சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துச் சாதனை படைத்துள்ளனர்

.jpeg
)





கருத்துகள் இல்லை