கிளிநொச்சி பாடசாலை பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்!📸

 


கிளிநொச்சி மாவட்ட பாடசாலை ஒன்றில் ஆசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக இன்று பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


ஒரு விடயத்தை இங்கு கண்டிப்பாக சுட்டிக்காட்ட வேண்டும்.


#யாழ்ப்பாண மாவட்டத்திற்கு மிக அருகில் உள்ள கிளிநொச்சி மாவட்டத்தில் ஆசிரியர்கள் பற்றாக்குறையுள்ள போதும் அதை இதுவரை அதிகாரிகள் நிவர்த்தி செய்யவில்லை.


கிளிநொச்சியின் பிரதான நகரின் வீதியோரம் உள்ள பாடசாலைகளில் கூட ஆசிரியர்கள் பற்றாக்குறை.


எப்படி கிளிநொச்சி மாவட்டம் கல்வியில் முன்னேறும்?


இன்றைய கல்வியில் கணித, விஞ்ஞான பிரிவுகளையே முன்னேற்ற வேண்டும் ஆனால் யாழ்ப்பாணத்திற்கு மிக அருகில் உள்ள கிளிநொச்சியில் பற்றாக்குறையுள்ள போது ஏனைய மாவட்டங்களின் அவலநிலை உங்களுக்கு புரியும்.


யாழ்ப்பாணத்திற்கு மிக அருகில் உள்ள கிளிநொச்சியில் ஆங்கில மொழி மூலம் உயர்தரம் படிக்க ஒரு பாடசாலை கூட இல்லை.


இப்படியே இருந்தால் கல்வியால் என்ன முன்னேற்றம் ஏற்படும்? நாடு எப்படி முன்னேறும்?


நாட்டில் சாராய கடைகளை சிபார்சு செய்யும் பாராளுமன்ற உறுப்பினர்களே அதிகமாக உள்ளனர். அவர்கள் எப்படி கல்வி பற்றி பேசுவார்கள்?

-வைத்திலிங்கம் ரஜனிக்காந்தன்-






கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.