புயலால் ஏற்பட்ட துயரம்!!
ஒட்டுமொத்த துயரத்தின் உச்சம் -ரம்புக் எல விலானகம மண்ணில் புதைந்து போன ஒரு கிராமத்தின் கண்ணீர்க்கதை.!
#நேற்றிரவு (29.11.2025) நடுநிசி .ஊரே தூக்கத்தில் அயர்ந்து போயிருந்த ஒரு தருணம். நள்ளிரவு 1.30 மணியளவில் சுமார் 50 வீடுகளையும் அதில் உறக்கத்தில் இருந்த 50 குடும்பங்களையும் மரணம் விழுங்கிய துயரத்தை எண்ணிக்கூட பார்க்க முடியாதுள்ளது. இதை எழுதும்போதே கண்கள் பனிக்கின்றன.என்ன நடந்தது?
இந்தக் கிராமத்தின் மக்கள் உறக்கத்தில் உறைந்து போயிருந்த கணம் சுற்றுமுற்றும் இருந்த பாறைகளும் மண்மேடுகளும் அவர்கள் மீது சரிந்து விழும் என அவர்கள் தமது கனவில் கூட கண்டிருக்கமாட்டார்கள். கடும் மழையால் பிடிமானம் இழந்திருந்த மண்மேடுகள் சரிந்து வந்து அவர்களது வீடுகளை முழுவதுமாக விழுங்கிக் கொள்கிறது. உள்ளே மனிதர்கள் குழந்தைகள் முதியோர்கள் நோயாளர்கள் எல்லோரும்தான்.
நீரில் கசிந்து வீடுகளில் வீழ்ந்த மண்மேடுகள் பெரும் பெரும் வீடுகளைக் கூட முழுமையாக மூடிக் கொள்கின்றன. மக்கள் மூச்சுக்காற்றை மட்டுமன்றி முகவரியைக் கூட இழந்த பரிதாபம் இது.யாரும் உடனடியாகச் சென்று உதவ முடியாதவாறு பாதைகள், சிறு வீதிகள் எல்லாமே சிதைந்து போனது.அதனால் பல மணித்தியாலங்கள் இந்த கிராமம் உலகப்பார்வையிலிருந்தே துண்டிக்கப்பட்டது.
இப்போதுதான் மக்கள் அங்கே படையெடுக்கிறார்கள்.ஆனால் யாருக்கும் எதுவுமே செய்ய முடியாத நிலை. அந்தப்பிரமாணடமான மண் சரிவுக்கு முன்னால் அவர்கள் கண்ணீர் மட்டுமே சிந்த முடிகிறது. இலங்கை இராணுவம் முழு மூச்சாக முயன்றதில் சுமார் பத்துப்பேரின் உடல்கள் மட்டும் தோண்டியெடுக்க முடிந்தது. அதற்கு மேல் தம்மால் எதுவுமே செய்ய முடியாதென அவர்களும் கையை விரத்துவிட்டதாகத்தகவல். எஞ்சியுள்ள உடல்களை தோண்டியெடுக்க என்ன செய்யலாம் என அரசாங்கம் கலந்தாலோசித்து வருவதாகவும் தகவல்.
சுமார் 50 குடும்பங்களைச்சேர்ந்த 200 அல்லது 180 பேரளவில் இந்த கிராமத்தில் மண்மேடுகளால் காவுகொள்ளப்பட்டிருக்கலாம் என அனுமானிக்கப்படுகின்றது. காரணம் ஒரு வீட்டில் சுமார் நான்கு பேர் உறங்கியிருந்தாலும் அவர்களது மொத்தம் 200.ஆகக்குறைந்தது மூன்றுபேர் என்றாலும் 150 பேர்.
இதை வாசிக்கும் போதே மனம் பதறுகிறது மண்சரிவில் சிக்கியவர்களின் மனநிலை எப்படி இருந்திருக்கும்!! இறைவா!!!!
பகிர்வு

.jpeg
)





கருத்துகள் இல்லை