நினைவு நாளில் பின்தங்கிய கிராமத்தில் வழங்கப்பட்ட உதவி!!
பிரான்சில் வசித்துவரும் புலம்பெயர் உறவு ஒருவர் தனது கணவர் திரு.சுப்பையாதனபாலசிங்கம் (சந்திரன்) அவர்களின்
ஜந்தாவது ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு பின்தங்கிய கிராமம் ஒன்றில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவினை வழங்கி வைத்துள்ளதோடு
தெரிவு செய்யப்பட்ட ஐந்து குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகளையும் வழங்கி வைத்துள்ளனர்.
தங்களது குடும்ப தலைவரின் நினைவு தினத்தில் மற்றோர்க்கு அன்னமிட்டு,உணவுப் பொருங்கள் வழங்கி நினைவுகூரும் குடும்பத்து உறவுகளுக்கு
மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பொதிகளினை பெற்றுக்கொண்ட பயனாளர்கள் தங்கள் நன்றிகளினை தெரிவித்துள்ளனர்.
நல்லெண்ணத்தோடு உதவிய குடும்ப உறவுகளுக்கு சமூக ஆர்வலர்களும் தமது நன்றியினையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.
.



.jpeg
)





கருத்துகள் இல்லை