இளைஞன் படுகொலை!!
யாழ்ப்பாணம் - வடமராட்சி கரணவாய் - கூடாவளவுப் பகுதியில் இளைஞன் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கொலை செய்யப்பட்டவர், இராஜகுலேந்திரன் பிரியந்தன் எனவும் இவர் பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 18 ம் திகதி நள்ளிரவு வேளையிலேயே இந்த கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தொலைபேசி அழைப்பு ஒன்று வந்த நிலையிலேயே இவர் வெளியே சென்றுள்ளார் எனவும் பின்தொடர்ந்து வந்த குற்றவாளி இவரை கூரிய ஆயுதங்களால் வெட்டி கொலை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மகனைக்காணவில்லை என பெற்றோர் தேடிய நிலையில் நடுவீதியில் குருதி வெள்ளத்தில் மகனைக்கண்டு உடனடியாக அவரை பருத்திதுறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் அவர் உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இவர் கடுமையாக போராடியே உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
நெல்லியடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

.jpeg
)





கருத்துகள் இல்லை