NPP யில் அங்கம் வகிக்கும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக வேண்டும்.!

 


திருகோணமலையில் சட்டவிரோதமாக நிறுவப்பட்டுள்ள புத்தர்சிலை விவகாரம் NPP யில் அங்கம் வகிக்கும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக வேண்டும். 


தமிர்ரசு கட்சி 15 வருடங்களாக இனப்படுகொலையாளிகளுக்கு எதிராக சர்வதேச விசாரணை வரவிடாமல் தடுத்து உள்ளக விசாரணைக்குள் முடக்கி இனப்படுகொலையாளிகளை பாதுகாத்ததன் விளைவாகவே அவர்கள் இன்றும் இனவாதமாக நீதிமன்றத் தீர்ப்பை மீறிச் செயற்படுகின்றார்கள். 


தமிழரசுக் கட்சி வரவுசெலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிக்காமல் நடுநிலை வகித்து ஆதரவு வழங்கியுள்ளது. அதன்மூலம் அனுரவின் இனவாத வரவுசெலவுத் திட்டத்திற்கு வெள்ளையடித்துள்ளார்கள். 


கடந்த செப்ரெம்பர் ஐநா மனித உரிமைகள் கூட்டத் தொடரிலும் சர்வதேச விசாரணைக் கோரிக்கை வரவிடாமல் தடுப்பதில் சுமந்திரன் செயலாளராக உள்ள தமிழரசுக் கட்சி முழுமூச்சாகச் செயற்பட்டது. சுமந்திரன் இலண்டன் சென்று சிறீலங்கா தொடர்பான தீர்மானம் கொண்டுவருவதற்குப் பொறுப்பான பிரித்தானிய வெளிவிவகார பிரிவைச் சந்தித்து உள்ளகவிசாரணைத் தீர்மானம் கொண்டுவருவதற்கீன முருமையான ஒப்புதலை வழங்கியதுடன் செம்மணி விசாரணையை நேர்த்தியாக நடாத்த வேண்டுமென அனுரவுக்கு எழுதியதன் மூலம் உள்ளகவிசாரணைக்கான தமிழரசுக் கட்சியின் ஆதரவையும் வெளிப்படுத்தியிருந்தார். 


இவ்வாறான செயற்பாடுகளே பௌத்த இனவாதிகளை ஊக்கப்படுத்தி தபிழர் தாயகப் பகுதிகளில் சட்டவிரோதமாக சிலை வைக்கும் செயற்பாடுகளை ஊக்கப்படுத்துகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.