வவுனியா விபுலானந்த கல்லூரியில் இரசாயனவியல் பாட ஆசிரியரை

நியமிக்காமல் இருப்பதற்கு வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு 10 இலட்சம் ரூபா பணம் பெற்றோர் ஒருவரால் வழங்கப்பட்டுள்ளதாக ஏழை தாய் ஒருவர் தன்னிடம் தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செ.திலகநாதன் குற்றம் சாட்டியுள்ளார்.

வவுனியாவில் இன்று (20.12.2025) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், வட மாகாணத்தில் கல்வியில் ஊழல் உள்ளதால் ஏழை மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

இந்த வடக்கு மாகாண கல்வி சமுதாயத்தில் நடைபெறுகின்ற ஊழல் தொடர்பாக நான் இங்கே தெரிவிக்க விரும்புகின்றேன்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீதியில் நான் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது ஒரு ஏழைத் தாய் என்னை மறித்து சொன்னார்.

தனது மகள் பண்டாரிக்குளம் விபுலானந்த கல்லூரியில் உயர் தரத்தில் கல்வி கற்றுக் கொண்டிருப்பதாகவும் அந்த பாடசாலையில் புதிய வகுப்புக்கு உயர்தரம் ஆரம்பித்து நான்கு மாதங்கள் முடிவடைந்தும் இதுவரையும் இரசாயனவியல் பாடத்திற்கு ஆசிரியர்களை நியமிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

அதற்கான காரணத்தை அவர் சொல்லும் போது எனக்கு இதயமே நின்றுவிடும் போல் இருந்தது. அவர் சொன்னார் உயர்தர பரீட்சையானது ஒரு போட்டி பரீட்சையாகும். சாதாரண ஏழை மாணவர்கள் கல்வி கற்கும் ஒரே இடம் பாடசாலையாகும்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.