நலமாய் இரு!
விரும்பியது வேண்டுமென்று
அடம் பிடித்தாய்
அதன் நன்மை தீமைகளைச்
சுட்டியப் பின்னும்
விடவில்லை.
கேட்டதை எல்லாம்
விலை நோக்காது
கஷ்டம் பாராது
வாங்கிக் கொடுத்தோம்.
இன்று
முதுமையில்
உன்னிடம்
ஒன்றே ஒன்று கேட்கிறோம்
மரணம் வரை
உன்னுடனே இருக்க வேண்டும் என்று.
நீயோ
ஆயிரம் காரணங்களை
அடுக்குகிறாய்
எங்களை மறுதலிக்க.
”நலமாய் இரு”
மனதார வாழ்த்தினர்
ஒன்றைப் பிள்ளையின்
பெற்றோர்.

.jpeg
)





கருத்துகள் இல்லை