சிட்னி கடற்கரையில் துப்பாக்கிச்சூடு 11 பேர் உயிரிழப்பு.!📸
அவுஸ்ரேலியாவின் சிட்னியில் உள்ள போன்டி கடற்கரையில் ஏராளமானோர் கூடியிருந்தனர். யூதர்களின் நிகழ்ச்சிக்காக பலர் கூடியிருந்த நிலையில், அங்கு வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் அவர்களை குறி வைத்து துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இச்சம்பவத்தில் குழந்தை உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 17 பேர் காயமடைந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் துப்பாக்கிதாரிகள் மீது துப்பாக்கியால் சுட்டனர். அதில் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், மற்றொருவர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சமூக ஊடகங்களில் பரவும் ஒரு வீடியோவில், பொதுமக்களில் ஒருவர் தாக்குதல் நடத்தியவர்களின் ஒருவனை நோக்கி சென்று அவனது துப்பாக்கியைப் பிடுங்கி, அவனையே சுட முயற்சிப்பது பதிவாகி உள்ளது.
அதே சமயம், இரண்டாவது நபர் பாலத்தில் இருந்து தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்துவதும் பதிவாகியுள்ளது.
துப்பாக்கிதாரி ஒருவர் நவீத் அக்ரம் (24 வயது, போனிரிக் நகரைச் சேர்ந்தவர்) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது வீடு சோதனை செய்யப்பட்டு வருகிறது. இவர் சுடப்பட்டு, கைது செய்யப்பட்டு, அங்கு அவருக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இவர் பாகிஸ்தானைச் சேர்ந்த அவுஸ்ரேலிய வம்சாவளியைச் சேர்ந்தவர் அடையாளம் என காணப்பட்டுள்ளார்.

.jpeg
)





கருத்துகள் இல்லை