விசா கட்டண உயர்வு - அமெரிக்காவில் குழப்பம்!!

 




அமெரிக்கா அதிபர் டொனால்ட் ரம்ப் H-1B விசா கட்டணத்தை உயர்த்தியமையை  எதிர்த்து அமெரிக்காவின் 20 மாகாணங்களில் ஒன்றிணைந்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

குடியேற்ற விதிகளில் கடுமை காட்டி வரும் ட்ரம்பின் இந்த அதிரடி முடிவானது,  மாகாணங்களின் பொருளாதார வளர்ச்சியைப் பாதிப்பதாக கூறி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அங்குள்ள பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் வெளிநாட்டு வல்லுனர்களை நம்பியுள்ளதால் இந்த விசா கட்டண உயர்வினால் அவர்களின் நிதிச்சுமை அதிகரிக்கும் எனவும் கருத்து கூறப்படுகிறது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.