தட்டுவன்கொட்டி கண்ணகை அம்மன் வித்தியாலயம் சுத்தம் செய்யப்பட்டது!📸
பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், வெள்ள நீர் உட்புகுந்த தட்டுவன்கொட்டி கண்ணகை அம்மன் வித்தியாலயத்தை சுத்தம் செய்யும் பணிகள் நேற்றைய தினம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டன.
இச் சுத்தம் செய்யும் பணிகளில் அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர், 55-வது படையணியின் அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினர், இரணைமடு விமானப்படையினர், Inqube Quantum Clothing (Bandaragama) நிறுவன பிரதிநிதிகள், பெற்றோர் மற்றும் பிரதேச மக்கள் ஆகியோர் இணைந்து செயற்பட்டனர். அனைவரின் ஒத்துழைப்பினாலும் பாடசாலை வளாகம் விரைவாகவும் முறையாகவும் சுத்திகரிக்கப்பட்டது.
மேலும், கண்ணகை அம்மன் வித்தியாலய மாணவர்களுக்கும் உமையாள்புரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இக் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு நேரடியாக அவற்றை வழங்கி வைத்தார்.
பாடசாலை மீளத் திறப்பை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட இச் செயற்பாடு, மாணவர்களின் கல்வி தொடர்ச்சிக்கு பெரும் உறுதுணையாக அமைந்துள்ளதாக பெற்றோரும் பிரதேச மக்களும் பாராட்டுத் தெரிவித்தனர்.


























.jpeg
)





கருத்துகள் இல்லை