அதிசயம், ஆனால் உண்மை!
சன் டிவியில் ஒரு ஈழத் தமிழருக்கு வாய்ப்பு கொடுத்ததே ஆச்சரியம்.
அதைவிட ஆச்சரியம் அந்த ஈழத் தமிழருக்காக ஈழத்திற்கே வந்து படப்பிடிப்பு நடத்தியிருப்பது.
ஆம். இந்த அதிசயம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
சன் டிவியின் சமையல் நிகழ்வில் பங்கு பற்றிய ஈழத்து ரப் பாடகர் வாகீசனுக்கு இந்திய அரசு விசா வழங்கவில்லை.
இதனால் சன் டிவி தன் படக்குழுவை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி இறுதிப் போட்டியில் வாகீசன் பங்குபற்ற வாய்ப்பு அளித்தது.
நான் அறிந்தவரையில் இறுதிப் போட்டியில் ஒரு போட்டியாளருக்காக இன்னொரு நாடு சென்று ஒளிபரப்பி வாய்ப்பளித்தது இதுவே முதல் முறையாகும்.
சன் டிவி இப்படி செய்தமைக்கு எதிர் வரும் தேர்தல் காரணம் என்று சிலர் கூறலாம்.
புலம்பெயர் தமிழர்களின் சந்தைக்காக இப்படி செய்கின்றனர் என்று இன்னும் சிலர் கூறலாம்.
இதற்கெல்லாம் சீமான் மற்றும் நாம் தமிழரின் அயராத குரல் கொடுப்பே காரணம் என்று வேறு சிலர் கூறலாம்.
எதுவாயினும் ஈழத்தமிழர் ரப் பாடகர் வாகீசனுக்கு இப்படி வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சிக்குரியதே.
இந்த நிகழ்வு வாகீசனை கோடிக்கணக்கான மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்திருக்கின்றது.
அவர் பாடிய “வண்ண மயில் ஏறும்” பாடல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆடும் ரீல்கள் பெரும் வைரலாக மாறி உள்ளன.
வாகீசனுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

.jpeg
)





கருத்துகள் இல்லை