வானிலை அறிக்கை வெளியானது!!

 


எதிர்வரும் 24 மணி நேரத்திற்கான வானிலை முன்னெச்சரிக்கை வெளியாகியுள்ளது.


கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும், பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.


மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.


.மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுகள், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்கள் மற்றும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.


தற்காலிக பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்துடன், மின்னல் தாக்கத்தினால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு  பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.