யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த நிலவரம் – அரசாங்க அதிபரின் அறிவிப்பு!
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்த நிலவரம் தொடர்பாக, மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களால் புதுப்பிக்கப்பட்ட நிலவர அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தென்மராட்சி, நெடுந்தீவு, வேலணை, சண்டிலிப்பாய், சங்கானை, யாழ்ப்பாணம், காரைநகர், நல்லூர், கோப்பாய், உடுவில், தெல்லிப்பளை, மருதங்கேணி, ஊர்காவற்றுறை, பருத்தித்துறை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் மொத்தம் 1710 குடும்பங்களைச் சேர்ந்த 5443 பேர் ஆரம்பத்தில் 59 பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான சமைத்த உணவு மற்றும் அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டன.
காலநிலை சீராகியதைத் தொடர்ந்து பெரும்பாலான குடும்பங்கள் தமது வீடுகளுக்குத் திரும்பியிருந்தாலும், இன்னும்
சாவகச்சேரி – 07 பாதுகாப்பு நிலையங்கள்
சங்கானை – 02 பாதுகாப்பு நிலையங்கள்
தெல்லிப்பளை – 02 பாதுகாப்பு நிலையங்கள்
உடுவில் – 01 பாதுகாப்பு நிலையம்
என மொத்தம் 12 பாதுகாப்பு நிலையங்களில் 354 குடும்பங்களைச் சேர்ந்த 1114 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான சமைத்த உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் பிரதேச செயலாளர்களினால் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும், 3715 குடும்பங்களைச் சேர்ந்த 11751 பேர் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளதாகவும் அறியப்படுகிறது.
அனர்த்தத்தால் ஏற்பட்ட சேத நிலவரம்:
முழுமையாக சேதமடைந்த வீடுகள் – 02
பகுதியளவில் சேதமடைந்த வீடுகள் – 370
சேதமடைந்த மீன்பிடி படகுகள் – 31
சேதமடைந்த மீன்பிடி வலைகள் – 30
யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேசங்களிலும் மீட்பு, நிவாரண நடவடிக்கைகள் தடையின்றி முன்னெடுக்கப்படுவதாகவும், தேவையான ஆதரவு தொடர்ந்து வழங்கப்படும் என மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

.jpeg
)





கருத்துகள் இல்லை