கௌரவங்களை இழந்த பிரித்தானிய இளவரசர்!!

 




பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூவின் இரண்டு முக்கிய கௌரவங்களை மன்னர் சார்லஸ் அதிகாரப்பூர்வமாக பறித்துள்ளார்.

இளவரசர் ஆண்ட்ரூ கடந்த 2006 முதல் ஆர்டர் ஆஃப் தி கார்ட்டர் பட்டத்தையும், 2011 முதல் ராயல் விக்டோரியன் ஆர்டர் கௌரவத்தையும் பெற்றிருந்த நிலையில் அவர் தற்போது ராயல் விக்டோரியன் ஆணைக்குழுவின் (knight grand cross of the Royal Victorian) நைட் கிராண்ட் கிராஸ் மற்றும் (knight companion of the Order of the Garter) ஆர்டர் ஆஃப் தி கார்ட்டரின் நைட் தோழன் ஆகிய பட்டங்களை இழந்துள்ளார்.

ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான ஆண்ட்ரூவின் சர்ச்சைக்குரிய தொடர்புகள் காரணமாக அவரை ஒதுக்கி வைக்கும் மன்னரின் முயற்சிகளில் இது ஒரு பகுதியாகும். இந்த உரிமைகளைப் பறித்ததற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு  வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.