தெஹிவளை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு!


தெஹிவளை "A க்வாடஸ்" விளையாட்டரங்கிற்கு அருகில் இன்று (06) இரவு 8.00 மணியளவில் 

இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.


தெஹிவளை பகுதியில் விளையாட்டரங்கிற்கு அருகில் இன்று இரவு 8 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். 


மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 


சம்பவத்தில் காயமடைந்தவர் களுபோவிலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.