இடர் காலத்தில் உதவிய புலம்பெயர் உறவுகள்!!



சுவிஸ் நாட்டில் வசித்து வரும் புலம்பெயர் உறவுகளான குகன் இரட்ணசிங்கம், பகீரதன்சு  கிர்தராஜா, மோகன், யுவகரன், சிவநாதன் ஆகிய நண்பர்கள் இணைந்து தாயகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கி வைத்துள்ளனர்.

இவர்கள், இரண்டு இலட்சத்து முப்பத்து இரண்டாயிரம் (232-000)ரூபா பணத்தினை திரட்டி மக்களிற்கான நிவாரணப் பணிக்காக அனுப்பி உள்ளார்கள்

.


 வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட இடங்களான, நட்டாங்கண்டல், சிராட்டிகுளம் மற்றும் தர்மபுரம், யாழ்ப்பாணம் ஆகிய நான்கு இடங்கள் உள்ளடங்கலாக மக்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. 


மழை இடரால் பாதிக்கப்பட்டு நிர்கதியான நிலையில் இருந்த உறவுகளுக்கு சுவிஸ்வாழ் நண்பர்களாக ஒன்றிணைந்து இந்த பணியைச்  செய்துள்ளார்கள். 



இந்த நல்லுள்ளங்களுக்கு பயனாளர்கள் சமூக ஆர்வலர்களும் தங்கள் நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.