சச்சினை முறியடித்த விராட் கோலி!!

 


இந்திய உள்ளூர் ஒருநாள் (50 ஓவர்) கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பையில் டெல்லி அணிக்காக இந்திய வீரர் விராட் கோலி விளையாடி வரும் நிலையில், அதில் பல சாதனைகளை அவர் படைத்துள்ளார்.

இன்றைய ஆட்டத்தில், முதல்தர கிரிக்கெட்டில் அதிவேகமாக 16 ஆயிரம் ஓட்டங்களை கடந்து விராட் கோலி சாதனை படைத்துள்ளார். மேலும் அதிவேகமாக 10 ஆயிரம் முதல் 11, 12, 13, 14, 15, 16 ஆயிரம் ஓட்டங்களை விளாசிய ஒரே வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

மேலும் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிக சதங்கள் விளாசிய வீரர்களில் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்த இடத்தில் விராட் கோலி உள்ளார்.

சச்சின் 538 போட்டிகள் விளையாடி 60 சதங்கள் விளாசியுள்ளார். விராட் கோலி 330 போட்டிகளில் 58 சதங்கள் விளாசி சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.