தையிட்டி விவகாரத்திற்கு அருட்தந்தை கண்டனம்!!
முன்னெடுத்த போராட்டத்திற்குள் புகுந்து பொலிஸார் மேற்கொண்ட காட்டுமிராண்டித்தனமான செயற்பாட்டினை வன்மையாக கண்டிப்பதாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்ட இயக்கத்தின் இணைப்பாளர்களில் ஒருவரான அருட்தந்தை கந்தையா ஜெகதாஸ் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம்(23.12.2025)மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சமயத்தலைவர்களாகிய நாங்கள்,மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களாகிய நாங்கள் இந்த செயற்பாட்டினை வன்மையாக கண்டிப்பதுடன் இவ்வாறு போராட்டத்தினை அடக்கி போராடும் மக்கள் மீது தமது வன்மத்தையும் வெறியாட்டத்தினையும் பாவித்து அவர்களை அடக்கும் செயல் என்பது இன்றும் இலங்கையில் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.

.jpeg
)





கருத்துகள் இல்லை