விமானியின் உடலுக்கு பட்டமளிப்பு!!


 அண்மையில் லுணுவில பகுதியில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்த விமானியின் பட்டச்சான்றிதழ் கொழுப்பு பல்கலைக்கழக உபவேந்தரால் கையளிக்கப்பட்டுள்ளது.

விமானியான விங் கொமாண்டர் நிர்மல் சியாம்பலாப்பிட்டியவின் உடலுக்கு கொழுப்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் இந்திக்க கருணாதிலகவினால்அவரது முதுகலைமாணி பட்டச்சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த விமானியின் இறுதிச்சடங்கானது விமானப்படையின் இறுதி மரியாதையுடன் 04.12.2025 நாளைய தினம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.