குஞ்சுக்குளம் தேக்கத்தில் சிக்கிய ஒரே குடும்பத்தை விமானப்படை மீட்டது !📸
சீரற்ற வானிலை காரணமாக ஏனைய மீட்புப் பணிகள் தாமதம் .மன்னார் மாவட்டத்தின் குஞ்சுக்குளம் தேக்கம் பகுதியில் கடந்த மூன்று நாட்களாக புயல் மற்றும் மல்வத்து ஓயா ஆற்றின் பெருக்கு வெள்ளம் காரணமாக அணைக்கட்டு அருகில் சிக்கித் தவித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் இன்று (30) காலை பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் தொடர்ந்த ஒருங்கிணைப்பு முயற்சியின் பலனாக, இலங்கை விமானப்படை சிறப்பு மீட்பு குழு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கணவன், மனைவி மற்றும் 10 வயது சிறுவனை வானூர்தி மூலம் மீட்கும் அவசர நடவடிக்கையை முன்னெடுத்து வெற்றிகரமாக நிறைவேற்றியது.
சுமார் இரண்டு மணிநேரத்துக்கும் மேலான கடினமான மீட்பு முயற்சிகளுக்குப் பின் அவர்கள் பாதுகாப்பாக வவுனியா ஜோசப் முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கித் தவிப்பவர்களை மீட்க விமானப்படை தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், ஆனால் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக சில இடங்களில் மீட்புப் பணிகள் தாமதமாகி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.




.jpeg
)





கருத்துகள் இல்லை