குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் (CID) காவலில் கைதி உயிரிழப்பு !


முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த உதயணன் அவர்கள், கொழும்பில் உள்ள கட்டுமான நிறுவனமொன்றில் கணக்காளராக பணிபுரிந்துவரும் நிலையில், 10.12.2025 அன்று CID அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


விசாரணை நடைமுறையின் போது அவர் தாக்கப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூழலில், சிறைச்சாலையில் இருந்தபோதே அவர் 26.12. 2025 அன்று உயிரிழந்தார்.


இந்த சம்பவம் பல கேள்விகளையும் அச்சங்களையும் எழுப்புகிறது. 


கடந்த ஒரு மாத காலத்தில் பொலீஸ் காவலில் பல தாக்குதல் மற்றும் உயிரிழப்பு சம்பவங்கள் பதிவாகிக்கொண்டிருக்கின்றது.


CIDயின் காவலில் பயங்கரவாதச் தடைச் சட்டத்தை பிரயோகித்தா இவரைத் தடுத்து வைத்தார்கள் என்பதை அறிய வேண்டியிருக்கின்றது. 


அத்துடன் இவரைக் கைது செய்தமைக்கான காரணமாக அவரது சகோதரர் குறிப்பிட்டுள்ள விடயத்தின் உண்மையையும் ஆராய வேண்டும்.


எமக்கு பாதுக்காப்பு இல்லாத சூழல் ஒன்று தொடர்வதை பல சம்பவங்கள் உணர்த்துகின்றன

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.