முக்கிய சந்தேக நபர் கைது


பொரளை பொலிஸ் பிரிவில் கடந்த வருடம் நவம்பர் 14ஆம் திகதி பெண் ஒருவரை வாளால் வெட்டி பலத்த காயம் ஏற்படுத்திய வழக்கின் முக்கிய சந்தேக நபர், நேற்று மாலை மாலபே பொலிஸ் பிரிவின் தலாஹேன பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.


ஹோமாகம பொலிஸ் பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால், T56 துப்பாக்கி, மெகசின், 10 தோட்டாக்கள் மற்றும் வெளிநாட்டு தயாரிப்பு கைக்குண்டு ஆகியவற்றுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.


சந்தேக நபர் பொரளை பகுதியைச் சேர்ந்த 27 வயது இளைஞர் என தெரிவிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக ஹோமாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


#Boralla #Malabe #Homagama #SriLankaPolice #CrimeNews #Arrest #WeaponSeizure #BreakingNews

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.