யாழ்ப்பாணத்தின் பிரபல பாடசாலையில் நிலவிய முரண்பாடு சுமூகமாக தீர்வு!
யாழ்ப்பாணத்தின் பிரபல்யமான ஒரு பாடசாலையைத் தொடர்புடைய முக்கிய பிரச்சினை ஒன்று சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கு அறிவிக்கப்பட்டது. குறிப்பாக, பாடசாலை அதிபர், பழைய மாணவர்கள் பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் தரம் ஐந்து மாணவர்களின் பெற்றோர் இடையில் கடந்த ஐந்து மாதங்களாக தொடர்ச்சியான முரண்பாடு நிலவி வந்துள்ளது.
இவ்விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட தரப்பினர் முறைப்படி சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கு தகவல் வழங்கியதை அடுத்து, சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு நேரடியாக பாடசாலை அதிபர், பாடசாலை அபிவிருத்தி சங்கம், பழைய மாணவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பெற்றோர்களுடன் கலந்துரையாடல் மேற்கொண்டோம்.
அந்த கலந்துரையாடலின் பயனாக, சம்பந்தப்பட்ட தரப்புகள் இணக்கப்பாட்டிற்கு வந்ததுடன், பாடசாலையின் செயற்பாடுகள் வழமைபோல் தடையின்றி தொடர ஏதுவான சூழல் உருவாக்கப்பட்டது.
இந்த தீர்வின் நிமித்தமாக, சம்பந்தப்பட்ட அனைவராலும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கு நன்றிகளும் பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

.jpeg
)





கருத்துகள் இல்லை