"இன்று நான் உன்னைக் காப்பாற்றுகிறேன், நாளை நீ என்னைக் காப்பாற்று"
இலங்கை அரசியல் என்பது ஒரு விசித்திரமான கோமாளிகளின் கூடாரமாக மாறிக்கொண்டு வருகிறது.
இங்கே கொள்கைகளும் கோட்பாடுகளும் வெறும் "வாயால சுடும் வடைகள் " மட்டுமே.
மேடைக்கு முன்னால் மைக் பிடித்து ஒருவரை ஒருவர் 'திருடன்' என்றும் 'துரோகி' என்றும் “மொக்கன்” சாடிக்கொள்ளும் அரசியல்வாதிகள், அதே சூட்டோடு நாடாளுமன்ற உணவகத்திலோ அல்லது நட்சத்திர விடுதிகளின் தனி அறைகளிலோ ஒன்றாக அமர்ந்து தேநீர் அருந்துவதை நாம் பலமுறை பார்த்திருக்கிறோம்.
அரசியல்வாதிகள் தங்களுக்குள் இருக்கும் பகைமையை மிகவும் தீவிரமாகக் காட்டுவதன் நோக்கம், மக்களிடையே உணர்ச்சிப்பூர்வமான பிளவை ஏற்படுத்து தங்கள் இருப்பை தக்க வைத்துக்கொள்வது.
இனம், மதம் மற்றும் மொழி ரீதியாக மக்களைப் பிரித்து வைப்பதன் மூலம், ஒரு குறிப்பிட்ட தரப்புக்குத் தாங்கள்தான் காவலர்கள் என்ற பிம்பத்தை அவர்கள் உருவாக்குவார்கள்.
தொண்டர்கள் தெருவில் இறங்கி அடித்துக் கொள்ளும் போது, இவர்களின் பிள்ளைகளும் குடும்பத்தினரும் வெளிநாடுகளில் ஒன்றாகச் சுற்றுலா சென்றுகொண்டிருப்பார்கள்.
இலங்கையில் ஆட்சி மாறினாலும், பழைய ஆட்சியாளர்களின் ஊழல் வழக்குகள் முடிவுக்கு வராததன் ரகசியம் இந்த "கை குலுக்கல்" கலாசாரம்தான்.
"இன்று நான் உன்னைக் காப்பாற்றுகிறேன், நாளை நீ என்னைக் காப்பாற்று" என்ற எழுதப்படாத ஒப்பந்தத்தின் கீழேயே இங்கு அரசியல் நகர்கிறது.
பாராளுமன்றில் ஒருவரை ஒருவர் கிரிமினல் என்று அழைப்பவர்கள், இரவு விருந்துகளில் ஒரே மேசையில் அமர்ந்து அடுத்த கட்ட “டீலிங்க்”களை பேசிக்கொள்வார்கள்.
இனிமேலாவது அரசியல்வாதிகளுக்காக நண்பர்களோடும் உறவினர்களோடும் பகைத்துக் கொள்வதை நிறுத்துங்கள்.
உணர்ச்சிவசப்படுவதைக் குறைத்துக்கொண்டு, அவர்கள் பேசும் பேச்சுகளுக்குப் பின்னால் இருக்கும் உண்மையான நோக்கத்தை ஆராயப் பழகுங்கள்.
அப்படி ஆராய தொடங்குகையில் பல உண்மைகள் உங்களுக்கு புரிய ஆரம்பிக்கும்.

.jpeg
)





கருத்துகள் இல்லை