rolls royce ரக கார்கள் இலங்கைக்கும் புதிதல்ல!
rolls royce ரக கார்கள் இலங்கைக்கும் புதிதல்ல, இது போன்ற உயர்தர கார்கள் டட்லி சிறிசேனவிற்கும் புதிதல்ல.
ஆனால் டட்லி சிறிசேனவை புனிதர் மாதிரி கதைக்கிறார்கள் பாருங்கள் அதுதான் புதிது.
இலங்கையில் ஏழைகளின் வயிற்றில் அடித்து, அவ்வவ்போது அரிசி தட்டுப்பாட்டை செயற்கையாக ஏற்படுத்தி, செயற்கையாக அரிசி விலையேற்றத்தை உருவாக்குபவர் என சொல்லப்படுபவர்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர், அரசியல் செல்வாக்கு, பணம், அதிகாரம் என்று வாழ்ந்து வந்த ஒரு வணிக மாஃபியா.
அண்மையில் அரிசி தட்டுப்பாடு வந்த போது, அனுரவிற்கு இவரைப்பற்றி நன்றாக தெரிந்து, தலையில் ஒரு குட்டுப்போட்டு அமைதியாக இருக்க வைத்திருக்கிறார்.
இப்படியான ஒருவருக்குத்தான் எல்லோரும் Fire விட்டுக்கொண்டு வருகிறார்கள், இங்கு வாழ்த்துவதை தவறு என்று சொல்லவில்லை, நேர்மையின் சின்னம், உழைப்பின் சிகரம் என்று சொல்லுறிங்க பாருங்கள் அதைத்தான் கொஞ்சம் ஏற்க முடியவில்லை.

.jpeg
)





கருத்துகள் இல்லை