அகிலம் போற்றும் அஸ்வாரூடா தேவி!


இராஜ ராஜேஸ்வரி தேவியின் குதிரைபடைத் தலைவியாக வலம் வருபவள். கையிலே உலக்கை கொண்டு உலாவரும்போது தண்டினியாகக் காட்சி அளிப்பவள்.


வெள்ளைக் குதிரையின் மீது இடக்கையிலே கடிவாளத்தைப் பற்றிக் கொண்டு வலக்கையில் உருவிய வாளினை ஏந்திக் கொண்டு ஆரோகணித்து வரும்போது அஸ்வாரூடப் பரமேஸ்வரியாகப் பவனி வருபவள்.


வெள்ளைவெளீர் என பளிச்சிட்ட அவளது குதிரை யாராலும் என்றுமே வெல்ல முடியாத சக்தி மிக்க குதிரையாக இருந்ததினால் அந்த சக்தியை குறிக்கும் சொல்லான அபராஜிதா என்ற பெயரை அந்தக் குதிரை பெற்றது.


தென் திசைத் தெய்வம் என்று வாராஹி அம்மை தியான சுலோகத்தில் போற்றப்படுகிறாள். செந்தமிழால் போற்றினாலும் பேசினாலும் இந்த அம்மைக்கு மிகவும் பிடிக்கும். அப்படியே நெகிழ்ந்து போய் அவர்களது நெஞ்சக் கமலத்தில் எழுந்தருளி பரவசத்தில் ஆழ்த்திடுவாள்.


திருவானைகாவில் எழுந்தருளியிருக்கும் அகிலாண்டேஸ்வரி அம்மன் வாராஹியின் அம்சத்தில் உதித்தவள் என்று சொல்லப்படுகிறது. அரசியல் செல்வாக்குடன் திகழவேண்டுமானால் இவளையே சரணம் அடைதல் வேண்டும். 


அரசு கட்டிலில் இருப்பவர்கள் தவறு செய்தால் அவர்களை உடனடியாகத் தண்டிப்பதற்கு வாராஹிதேவியின் அம்சமான அஸ்வாரூடா தேவியால்தான் முடியும்.


தினமும் குளித்தப் பின் 108 முறை கீழ்கண்ட அஸ்வாரூட வாராகியின் ஸ்லோகத்தை ஜபம் செய்தால் நமக்கு ஏற்ப்படும் தீமைகள் அழியும் என்பார்கள்.  


ஸ்லோகம்


அம்பிகா அனாதினிதான அஸ்வாரூட அபராஜிதா

 

பொருள் 


''உலகைக் காக்கும் அம்பிகையின் சக்தியில் இருந்து வெள்ளை குதிரை மீது அமர்ந்தபடி வெளிவந்துள்ள அஸ்வாரூடை தேவியே, உன்னை நான் மனதார தியானிக்கிறேன். நீயே என்னுடன் இருந்துகொண்டு, அலைபாயும் என் மனத்தைக் கட்டுப்படுத்தும் சக்தியை கொடுத்து என்றும் அமைதியோடு இருக்க எனக்கு அருள் புரிய வேண்டும். தேவியே உன்னிடமே நான் முழுமையாக சரணடைகின்றேன்.


கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள வைகோம் மகாதேவர் ஆலயத்தில் அஸ்வாரூடையின் யாகமும், ஹோமமும் நடைபெறுகிறது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.