போராட்டக்களத்தில் மேலும் மோசமாகும் உடல்நிலை!📸


ஆறு வருடங்களுக்கு மேலாக நாடுபூராகவும் பாடசாலைகளில் ஆசிரியப்பணி புரிந்துவரும் ஆசிரிய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தமது ஆசிரியப்பணியை நிரந்தரமாக்கக்கோரி கடந்த மூன்று நாட்களாக கொழும்பு ஜனாதிபதி செயலகம் முன்பு உணவுத்தவிர்ப்பு சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்!


இரண்டாவது நாளான நேற்று பெண் உத்தியோகத்தர் ஒருவரின் உடல் நிலை மோசமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்!


இன்று மூன்றாவது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட ஏனைய சில ஆசிரிய அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் உடல்நிலை மேலும் மோசமடைய ஆரம்பித்ததை அடுத்து அவர்களுக்கு போராட்டக்களத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது!


போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்போம்,கடந்த அரசாங்கங்கள் போல இந்த அரசும் ஆறு வருடங்கள் சேவை புரிந்து மாணவர்களின் கல்வியை மேம்படுத்த உதவிய எம்மை ஏமாற்ற போகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது என்றும்!

எமக்கான உரிய நிரந்தர தீர்வை வழங்கும் வரையில் போராட்டத்தை கைவிடப்போவதில்லை 

என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்!


தகவல் 

பட்டதாரி ஒன்றியம்,இலங்கை.

பாடசாலை ஆசிரிய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்.






கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.