நீண்ட நாட்களாக குண்டும் குழியுமாக இருந்த வீதி சீரமைக்கப்பட்டது!📸
யாழ் இந்து ஆரம்ப பாடசாலை சந்தி அரசடி வீதியூடாக நல்லூர் நோக்கி செல்லும் வீதி, நீண்ட காலமாக குண்டும் குழியுமாக இருந்து மழைக்காலங்களில் நீர் தேங்கி, வாகனப் போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் பெரும் சிரமங்களை ஏற்படுத்தி வந்தது.
இந்த விடயம் 9-ஆம் வட்டார உறுப்பினர் நகுலேஸ்வரி அவர்களால் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மராமத்து குழு உறுப்பினர் மதுசிகான் t.n p f அவர்களால் RDA பொறியியலாளருக்கு நேரடியாக மக்கள் எதிர்நோக்கும் பிரச்னை தொடர்பாக அறிவிக்கப்பட்டு கடிதமுக் கொடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து,
வீதியோரங்களிலும் குழிகளிலும் தேங்கி இருந்த நீர் மாநகர சபை ஊழியர்கள் மற்றும் RDA ஊழியர்களால் வெளியேற்றப்பட்டு, துரிதமாக வீதி சீரமைக்கப்பட்டது 👏
🙏 விரைவாக செயற்பட்ட
RDA அதிகாரிகள் & ஊழியர்கள்,
மாநகர சபை உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும்
எமது மனப்பூர்வமான நன்றிகளும் வாழ்த்துகளும்.
சே.மதுசிகான். மாநகர சபை உறுப்பினர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
#RoadDevelopment #PublicService #Jaffna #CommunityWork










.jpeg
)





கருத்துகள் இல்லை