கிளிநொச்சியில் 55வது காலாட்படை புதிய தளபதி அரசாங்க அதிபருடன் சந்திப்பு!📸


புதிதாக பதவியேற்ற 55வது காலாட்படை படைப்பிரிவின் தளபதி, மேஜர் ஜெனரல் HMGE Herath RSP USP ndu psc (General Officer Commanding – 55 Infantry Division) அவர்கள், 551வது காலாட்படை பிரிகேடின் கட்டளைதலைவர், பிரிகேடியர் TBMR Kandekumbura RSP USP அவர்களுடன் இணைந்து, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களை 05.01.2026 திகதி மாவட்டச் செயலகத்தில் உத்தியோகபூர்வமாகச் சந்தித்து கலந்துரையாடினார்.


இந்த சந்திப்பின் போது, கிளிநொச்சி மாவட்டத்தின் தற்போதைய நிர்வாக நிலை, அபிவிருத்தி செயற்றிட்டங்கள், பாதுகாப்பு தொடர்பான ஒத்துழைப்பு, இயற்கை அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகள், அரசாங்க துறைகளுக்கும் பாதுகாப்புப் படைகளுக்கும் இடையிலான ஒருங்கிணைந்த செயற்பாடுகள் குறித்து விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இக் கலந்துரையாடலில்


கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நளாஜினி இன்பராஜ்,


அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் திரு A.M.R.N.K. அழகக்கோன்,


55வது காலாட்படை படைப்பிரிவு மற்றும் 551வது காலாட்படை பிரிகேடின் உயர் அதிகாரிகள்


ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.


மேலும், மேஜர் ஜெனரல் HMGE Herath அவர்கள், 55வது காலாட்படை படைப்பிரிவின் 30வது தளபதியாக, 2026 ஜனவரி 02ஆம் திகதி, கிளிநொச்சியில் அமைந்துள்ள அதன் தலைமையகத்தில் அதிகாரபூர்வமாகப் பதவியேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


இந்த உத்தியோகபூர்வ சந்திப்பு, கிளிநொச்சி மாவட்டத்தின் நிர்வாகச் செயற்பாடுகளுக்கும் பாதுகாப்புத் துறையினருக்கும் இடையிலான நல்லுறவையும் ஒருங்கிணைப்பையும் மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்திருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.