நடிகை தமன்னாவின் சம்பளம்!!
தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக வலம்வருபவர் நடிகை தமன்னா நிமிடத்துக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகி நெட்டிசன்களை வாய் பிளக்க வைத்துள்ளது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடிகை தமன்னா ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவதற்காக மட்டுமே அதிக சம்பளம் வாங்கும் நட்சத்திரம் என்ற பெயரைப் பெற்றுள்ள தமன்னா தற்போது ஒரு நிமிடத்துக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
அண்மையில் கோவாவின் பாகா கடற்கரையில் உள்ள பிரபலமான லாஸ் ஓலாஸ் கடற்கரை கிளப்பில் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் தமன்னா, நடிகை சோனம் பஜ்வாவுடன் இணைந்து நடனமாடினார்.
இந்த 6 நிமிடம் மட்டுமே நடனம் ஆடியதாகவும், இதற்காக தமன்னாவுக்கு 6 கோடி ரூபாய் வரை சம்பளம் வழங்கப்பட்டிருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த வகையில் ஒரு நிமிடத்துக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கி எந்த நடிகையும் செய்யாத சாதனையைப் புத்தாண்டு தினத்தில் படைத்திருக்கிறார் தமன்னா.

.jpeg
)





கருத்துகள் இல்லை