ஞானலிங்கேச்சுரத்தில் சுவிற்சர்லாந்து நாட்டின (தேசிய)கிரான்சு-மொண்டானா நேரிடர் நினைவு வழிபாடு!

 


ஞானலிங்கேச்சுரத்தில் சுவிற்சர்லாந்து நாட்டின (தேசிய)கிரான்சு-மொண்டானா நேரிடர் நினைவு வழிபாடு


09. 01. 2026 வெள்ளிக்கிழமை

14.00 மணிமுதல்

Europaplatz 1B, 3008 Bern


01.01.2026 அன்று கிரான்ஸ்-மொண்டானாவில் நடைபெற்ற புத்தாண்டு விழாவில் ஏற்பட்ட பேரழிவான தீவிபத்தில் பலர் உயிரிழந்து, பலர் காயமடைந்ததைத் தொடர்ந்து, 09.01.2026 வெள்ளிக்கிழமை தேசிய துக்க நாளாக சுவிற்சர்லாந்து அரசு அறிவித்துள்ளது. இந் நாட்டின (தேசிய) துன்பியல் (துக்க) நாளினை முன்னிட்டு, ஈழத்து சைவத்தமிழ் சைவநெறிக்கூடம் நாமும் சுவிற்சர்லாந்து அரசின் அழைப்பை ஏற்று நினைவேந்தல் நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளோம். 


பேர்ன் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலில் 

14.00 மணிக்கு மணி ஒலிக்கப்படும், ஒரு மீச்சிறு (நிமிடம்) அகவணக்கம் கடைப்பிடிக்கப்படும், பின்னர் சிறப்பு வழிபாடு நடைபெறும்.


இவ்வழிபாட்டின் மூலம் உயிரிழந்தவர்களுக்கு நினைவுவணக்கம் செலுத்தி, அவர்களின் உயிர்கள் ஈடேற்றத்திற்கும், பேரிடலால் ஊறுக்குள்ளான (பாதிக்கப்பட்ட) குடும்பங்களுக்கு ஆறுதல், ஆற்றல் மற்றும் நம்பிக்கை கிடைக்கவும் வழிபாடு நடைபெறும். இதன் வழியாக, சுவிற்சர்லாந்து சைவத்தமிழ் சமூகம் நாட்டின் மக்களுடன் எமது ஒற்றுமை, மாந்தர் அன்பு மற்றும் மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்துகிறது.


வழிபாட்டில் பங்கெடுக்க அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.