கப்டன் பண்டிதர் நினைவுகளுடன்.. !

 


தலைவர் போராட்டம் ஆரம்பித்த போது ஒவ்வொருத்தரையும் தனக்கு நிகராகவே வளர்த்தெடுத்தார். ஏனென்றால் தனக்கு ஏதேனும் நிகழ்ந்தால் போராட்டத்தை முன்னகர்த்த உருவாக்கிய வேலைத்திட்டம் அது. 


சீலன், செல்லக்கிளி அம்மான் தொடக்கம் கிட்டு, மாத்தையா வரை ஒவ்வொருத்தரும் தனிப் பெரும் ஆளுமைகளாக வளர்ந்ததன் பின்னணி இதுதான்.


உதாரணத்திற்கு புகழ் பெற்ற தின்னவேலி கண்ணிவெடித் தாக்குதலில் செல்லக்கிளி அம்மானை தலைமை தாங்க விட்டுவிட்டு ஒரு கடை நிலைப் போராளியாக அந்தத் தாக்குதலில் தலைவர் பங்கெடுத்ததைச் சொல்லலாம். 


ஆனால் வெளியில் தெரியாத கதைகள் ஏராளம். அதில் ஒன்று கப்டன் பண்டிதர் பற்றியது. ஒரு கட்டத்தில் தனக்குப் பின் கப்டன் பண்டிதரைத்தான் தலைவர் போராட்டத்தை வழி நடத்தத் தேர்ந்தெடுத்திருந்தார். இது பின்னாடி இணைந்த போராளிகள் உட்பட பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. அப்போதைய மேல் மட்ட உறுப்பினர்களுக்கும், ஆதரவாகச் செயற்பட்ட மக்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை இது. 'ஓட்டிகள்' எனப்படும் தமிழீழத்திற்கும் தமிழகத்திற்கும் இடையில் வழங்கலில் ஈடுபட்ட கடலோடிகள் பலர் சொல்ல நான் இதைக் கேட்டிருக்கிறேன்.


இந்தியப் பயிற்சியின் போது போராளிகளை ரோ அமைப்பு கணக்கெடுத்துக் கொண்டிருந்தது. இதைக் கவனித்த தலைவர் தூர நோக்கில் கப்டன் பண்டிதரை அழைத்து அவரது தலைமையில் ஊரிலேயே ஒரு தொகுதி போராளிகளுக்கு இரகசியமாகப் பயிற்சி கொடுக்க வைத்து தனித்து இயங்கச் செய்தார். இந்திய ரோ அமைப்பால் சிங்களத்துடன் ஏதும் உடன்பாடு எட்டப்பட்டு தானும் சக தளபதிகளும் ஒரு வேளை கொல்லப்பட்டாலோ,சிறைப் பிடிக்கப்படாலோ பண்டிதர் போராட்டத்தைத் தொடரத் தலைவர் எடுத்த முடிவு அது.


பண்டிதர் வீரச்சவடைந்த போது அப்போது அவருடன் வீரச்சாவடைந்தவர்கள் உடல்கள் ரூபவாகினியில் காட்டப்பட்டபோதுதான் தங்கள் பட்டியலில் இல்லாதவர்களின் உடல்களைப் பார்த்து ரோ அமைப்பு அதிர்ச்சியுற்று தலைவரின் மதி நுட்பத்தைப் பார்த்துப் பயந்தது. 


தலைவருக்கு நிகரான / தலைவரின் அதிவிசுவாசத்திற்கும்/ நம்பிக்கைக்கும் உரிய/ போராட்டத்தின் ஆணிவேரும், சிற்பியுமான கப்டன் பண்டிதர் நினைவுகளுடன்.. 


(09.01.1985)

Parani Krishnarajani Tharan

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.