குளவி கொட்டியதில் அரச உத்தியோகத்தர் உயிரிழப்பு!!
மாங்குளத்தில் குளவி கொட்டியதில் அரச உத்தியோகத்தர் ஒருவர் #உயிரிழந்துள்ளதுடன் 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு - மாங்குளம் பகுதியில் இன்று (27) பிற்பகல் பாடசாலை மாணவர்கள் பாடசாலை விட்டு திரும்பிக் கொண்டிருக்கையில் பழைய கொலணி பகுதியில் குளவி கூடு கலைந்து வீதியால் சென்றவர்களை குளவிகள் கொட்டின.
இதில் துணுக்காய் கல்வி வலயத்தில் பணியாற்றும் ஆரம்ப பாடசாலை உதவிக் கல்விப் பணிப்பாளர் அன்ரனி ஜோர்ஜ் (வயது-54) என்ற அரச உத்தியோகத்தர் #வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் #உயிரிழந்துள்ளார்.
மேலும் 5 பாடசாலை மாணவர்கள் குளவிக் கொட்டிற்கு இலக்கான நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குளவிக்கூடு கலைத்தால் கூடியதூரம் அதிலிருந்து விலகியிருப்பதால் ஆபத்தை குறைத்துக்கொள்ள முடியும்.
தனது மகனை பாடசாலையிலிருந்து அழைத்துவரும் போது எதிர்பாராவிதமாக நடந்த இந்த சம்பவத்தில் #உயிரிழந்த அரச உத்தியோகத்தரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்😥😥
#Mullaitivu #mankulam #SriLankaTamilNews #NewsUpdate #January2026 #RIP #awareness #BreakingNews

.jpeg
)





கருத்துகள் இல்லை