மனலவி பிள்ளைகள் பயணித்த முச்சக்கர வண்டிக்கு தீவைத்த இராணுவத்தினன்!!
குடும்பத் தகராறு காரணமாக தனது மனைவி பிள்ளைகள் பயணித்த முச்சக்கரவண்டியை இராணுவத்தினர் ஒருவர் தீவைத்து எரித்த சம்பவத்தால் மனைவிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் கிராதுருக்கோட்டை, ஹோபாரியாவின் மகாவேலி கிராமப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
தீப்பிடிப்பில் காயமடைந்த பெண் அருகிலுள்ள கால்வாயில் குதித்து உடலின் தீயை அணைக்க முயன்ற நிலையில் உள்ளூர்வாசிகள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் அந்தப் பெண்ணுக்கு பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிரதுருக்கோட்டை ஹோபாரியா ஜெயந்திபுர பகுதியைச் சேர்ந்த 36 வயது பெண் ஒருவர் சம்பவத்தில் காயமடைந்தார்.
சம்பவத்தில் பின் இருக்கையில் இருந்த 14 வயது மகன் முச்க்கரவண்டியிலிருந்து குதித்து தப்பியுள்ளார்
குடும்பத்தினர் பயணித்த முச்சக்கரவண்டியை தீவைத்து எரித்த இராணுவ வீரர் கிரதுருக்கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அவர் பலாலி இராணுவ முகாமில் பணியாற்றும் 43 வயதுடைய நபர் என தெரிவிக்கப்படுகிறது

.jpeg
)





கருத்துகள் இல்லை