ஆடு திருடிய கள்வர்கள் பிடிபட்டனர்!!

 


கிளிநொச்சி - தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தருமபுரம் பகுதியில் இரவு வேளைகளிலும் ஆள்நடமாட்டம் அற்ற பகுதிகளிலும் ஆடுகளைத் திருடி வந்த கள்வர்கள் தருமபுரம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


திருட்டு ஆடுகளை அதன் பெறுமதியின் அரைவிலைக்கும் குறைவாக விற்பனை செய்து பணத்தைப் பெற்றுள்ளனர். 


இவ்வாறு விற்கப்பட்ட ஆடுகள் உரிமையாளர்களால் இனங்காணப்பட்டு, நீதிமன்ற தீர்ப்பின் பின்னர் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 


கஞ்சா, கசிப்பு போன்ற சட்டவிரோத பாவனைகளுக்காகவே இவ்வாறு திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.


ஆடு திருடுபவர்களைவிட அதனை மிகக்குறைந்த விலைக்கு வாங்குபவர்களே திருட்டை ஊக்குவிப்பவர்கள், அவர்களே, பெருங்குற்றவாளிகள் எனவும் அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.