ஒன்லைனில் ஓட்டுநர் உரிமங்கள்!!

 


திர்வரும் ஏப்ரல் மாதம் தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் 25 மாவட்டங்களிலும் ஓட்டுநர் உரிமங்களை ஒன்லைனில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணையர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த சேவை தற்போது 11 மாவட்டங்களில் ஒன்லைனில் செயல்பட்டு வருகிறது. மீதமுள்ள மாவட்டங்களில் ஓட்டுநர் உரிமங்களை ஒன்லைனில் வழங்குவதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து மாவட்டங்களிலும் ஓட்டுநர் உரிமங்களை ஒன்லைனில் வழங்குவதன் மூலம், ஒரு மாதத்திற்குள் ஓட்டுநர் உரிமங்களைப் பெற முடியும் என அவர் கூறியுள்ளார்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.